உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மழைநீரில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

 மழைநீரில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தெற்கு தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சி தெற்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடு களுக்கு முன்பு குளம்போல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர். எனவே பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் கழிவுநீர் செல்வதற்கும் மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி