உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாலையோரத்தில் குப்பை அகற்றம்

சாலையோரத்தில் குப்பை அகற்றம்

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு சாலையோரம் குவிக்கப்பட்ட குப்பையை சுத்தம் செய்தனர். முதுகுளத்துார் பேரூராட்சியில் வீடுகள், கடைகளில் பயன்படுத்தப்படும் குப்பையை சாலை, தெருக்களில் ஆங்காங்கே குவிக்கின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை பணியாளர்கள்தெரிவித்தும் மக்கள் கண்டு கொள்வதில்லை. தினமும் பேரூராட்சி பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பை பெற்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தனியாக பிரித்து உரங்கள்தயாரித்து விநியோகம் செய்கின்றனர். ஒருசிலர் தெருக்களில் ஆங்காங்கே குப்பை கொட்டி வருகின்றனர்.முதுகுளத்துார்--கடலாடிசாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பேரூராட்சி பணியாளர்கள் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம்செய்து மரக்கன்று வளர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தனர். தற்போது பொதுமக்கள் சாலையோரம்​ குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு சாலையோரம் குவித்துள்ள குப்பையை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை