மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
5 hour(s) ago
விழிப்புணர்வு
9 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
9 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
9 hour(s) ago
ராமநாதபுரம் பகுதிக்கு நகர் மட்டுமின்றி, கிராமங்களிலிருந்து அலுவலர்கள், கல்லுாரி, பள்ளி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக இலவச கட்டணம் என்பதால் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் டவுன் பஸ்சில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத ஓட்டை, உடைசல் பழைய பஸ்களை நகர், கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது. இவற்றில் இருக்கைகள், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. நடுரோட்டில் பஞ்சராவது, பழுதாகி நின்று விடுகிறது என மக்கள் புகார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து ஆற்றங்கரை சென்ற அரசு டவுன் பஸ் (19 ஏ) மாலை 6:30மணிக்கு நதிப்பாலம் அருகே பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று பஸ் வரும் வரை காத்திருந்து சிரமப்பட்டனர். ஜூலை 22ல் ராமநாதபுரம் அரண்மனையில் 4 சி அரசு டவுன் ெஷல்ப் எடுக்காததால் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் பின்புறத்தில் தள்ளி விட்டு பஸ் இயக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் அடிக்கடி நடக்கிறது.இவற்றை ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் புறப்படும் போதே பஸ்சை ஆய்வு செய்து குறைகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பழைய பஸ்களின் தரத்தை உறுதி செய்து இயக்க வேண்டும்.அதற்கு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
5 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago