உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சின்ன ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழா

சின்ன ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழா

கீழக்கரை,: -ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இளையராஜா முன்னிலை வகித்தார். ஆசிரியை சரண்யா வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடந்தது. சிலம்ப ஆசிரியர் அகமது மரைக்கான் சிலம்பம் மற்றும் கராத்தே நிகழ்ச்சிகளை நடத்தினார். பரிசுகள் வழங்கப்பட்டன.பாஸ்கரன், சத்துணவு பொறுப்பாளர் சேகர், பா.ஜ., மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆனந்தராஜ், இளையராஜா, கோமதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை