உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்

ராமநாதபுரம்: குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காந்தி கூறியுள்ளதாவது: இந்தாண்டு 32வது குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பரில் நடைபெற உள்ளது. இதற்கு கருப்பொருளாக நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் இவற்றில் பயிலும் 11 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இருவர் குழுவாக சேர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள் அல்லது கல்லுாரி மாணவர்களின் வழிகாட்டுதலோடுநீர் சூழலும் பாதுகாப்பும், நீர் சார்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்குமானது, நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுக்திகள் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஆய்வு செய்ய வேண்டும்.இந்த ஆய்வுக் கட்டுரைகள் டிச., மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வாகும் சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இடம் பெறலாம். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் ஆய்வு தலைப்பை www.tnsf.co.inஎன்ற இணையதளத்தில் பதிவுசெய்யவும். மேலும் விபரங்களுக்கு 79048 12665, 99942 42298 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் லியோன் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை