உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் புற்கள்: பக்தர்கள் அருவருப்பு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் புற்கள்: பக்தர்கள் அருவருப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் புற்கள் ஒதுங்கி கிடந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். இந்நிலையில் அக்னி தீர்த்த கடலில் தனியார் விடுதிகள், கழிப்பறை கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அக்னி தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. தற்போது பாதாள சாக்கடை திட்டம் செயல்படுவதால் அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் கோடை காலத்தில் கடலில் வளரும் புற்கள் தானாக அறுவடையாகி கரை ஒதுங்கும். அதன்படி நேற்று ஏராளமான கடல் புற்கள் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கியது. மேலும் பக்தர்கள் தீர்த்த கடலில் வீசிய பழைய துணிகள் கடற்கரையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தது. இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை