உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடைநிலை ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சங்க மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வினோத்பாபு, பொருளாளர் தினேஷ் முன்னிலை வகித்தனர். இதில் 20 ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டம் இன்றும் தொடரும் என ஆசிரியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்