சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை
கடலாடி: கடலாடி தேவர் திருமண மண்டபத்தில் சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சீர்மரபினர் நல வாரிய அலுவலர் மற்றும் விடுதி காப்பாளர் பழனி தலைமை வகித்தார். கடலாடி தேவர் மகாசபை தலைவர் ஜெகநாதன் முன்னிலை வைத்தார். செயலாளர் சபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் செல்லபாண்டியன், மாயகிருஷ்ணன், பகவதி அறக்கட்டளை தலைவர் வெள்ளைப்பாண்டியன், கோட்டைச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். 100 பேருக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கடலாடி கல்லுாரி விரிவுரையாளர் பொன்முத்து நன்றி கூறினார்.