உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பிரதான கால்வாய்களில் ஓடும் கழிவுநீர்: விவசாயிகள் பாதிப்பு

பரமக்குடியில் பிரதான கால்வாய்களில் ஓடும் கழிவுநீர்: விவசாயிகள் பாதிப்பு

பரமக்குடி- பரமக்குடியில் பிரதான கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் புதர்மண்டியம், கழிவுநீர் செல்வதால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பார்த்திபனுார் பகுதியில் மதகு அணை கட்டப்பட்டது.மதகு அணை கட்டிய 35 ஆண்டுகள் கடந்து உள்ளது. இந்த அணையில் இருந்து வைகை ஆறு வழியாக தண்ணீர் கடந்து செல்லும் வகையில் உள்ளதுடன், நேரடியாக கடலில் கலக்காமல் ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைகிறது. மேலும் வலது, இடது பிரதான கால்வாய்கள் வெட்டப்பட்டு அதன் வழியாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் நடக்க ஏதுவாக இருந்தது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடலில் கலக்காத வைகை என்ற பெருமை பெற்றுள்ளது. ஆனால் ஆறு உட்பட பிரதான கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் பரமக்குடி நகரின் ஒட்டுமொத்தமாக கழிவுநீர் செல்கிறது.வைகையில் தண்ணீர் வரும் பொழுதும் கழிவு நீரால் நுரைகள் உருவாகி மக்கள் துர்நாற்றத்தில் சிரமம் அடைகின்றனர்.மேலும் இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.இத்துடன் கண்மாய்களில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மடியும் சூழல் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும் சூழல் நீடிக்கிறது.எனவே கால்வாய்களில் கழிவு நீரை முறைப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ