ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று காலையில் மழை பெய்த போது தண்ணீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடை மேன்ஹோல் நிரம்பி கழிவு நீருடன் ஓடியதால் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். சிறிய மழை பெய்தால் கூட ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் ரோட்டில் குளம் போல மழைநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. நேற்று காலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம்--ராமேஸ்வரம் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, பாரதிநகர், நேருநகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர், மழைநீரில் கலந்து ஓடியதால் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். * செடிகளை நட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் தேவிபட்டினம் கேணிக்கரை ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஒடிய போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேங்கிய நீரில் செடிகளை நட்டு வைத்து கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர்.--- ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று காலையில் மழை பெய்த போது தண்ணீர் செல்ல வழியின்றி பாதாள சாக்கடை மேன்ஹோல் நிரம்பி கழிவு நீருடன் ஓடியதால் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். சிறிய மழை பெய்தால் கூட ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் ரோட்டில் குளம் போல மழைநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. நேற்று காலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம்--ராமேஸ்வரம் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, பாரதிநகர், நேருநகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர், மழைநீரில் கலந்து ஓடியதால் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். * செடிகளை நட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் தேவிபட்டினம் கேணிக்கரை ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஒடிய போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேங்கிய நீரில் செடிகளை நட்டு வைத்து கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.