கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 19 கிலோ கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பாரதிநகர் மீன்மார்க்கெட், ரோட்டார கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராமநாதபுரம் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள், கடல் அமலாக்கப் பிரிவு அலுவலர் இப்ராஹிம் ஆய்வு செய்தனர். பாரதிநகர், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதி கடைகளில் விற்கப்படும் மீன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் மீன்களில் வேதிப்பொருள் ஏதும் கலக்கப்படவில்லை என தெரியவந்தது. அதேநேரத்தில் 19 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருப்பது தெரியவந்தது. கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். விற்பனை செய்த இரு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதித்தனர்.