உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல்; தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விடுகின்றனர்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல்; தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விடுகின்றனர்

தமிழகத்தின் எல்லைப் பகுதியில் இருந்து இலங்கை மிக அருகில் உள்ளதால் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்தில் விளையும் கஞ்சா அதிகஅளவில் கடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் விளையும் கஞ்சா தரமானதாக இருக்கும் என்பதால் இதன் விலையும் அதிகம். இந்த வாரத்தில் இலங்கை கடற்படையினர் வென்னப்புவ, போலவத்த பகுதியில் 900 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. யாழ்பாணம் மாமுனை கடற்கரையில் 71 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கடத்தியவர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி பகுதியில் இருந்து அதிகளவில் கஞ்சா கடத்தல் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி., பட்டணம் தீர்த்தாண்ட தானம் கடற்கரைப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 98 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்துள்ளனர். இப்படி தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது. கடத்தப்பட்ட கஞ்சா கிலோ 15 ஆயிரம் முதல் தரத்திற்கேற்ப ஒரு லட்சம் வரை மதிப்பிடப்படுகிறது. கடல் எல்லை பகுதியில் கடற்படை யினர், கடலோர காவல்படையினர், மரைன் போலீஸ், சுங்கத்துறை, கியூ பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்தும் கஞ்சா இலங்கைக்கு தொடர்ந்து கடத்தப் படுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது குறித்து அதி காரிகள் கூட்டமைப்பை உருவாக்கி கஞ்சா கடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை