நீர் நிலைகளில் விதிமுறைப்படி முறையாக மண் எடுக்க வேண்டும்
பரமக்குடி: நீர் நிலைகளில் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி பெற்றவர்கள் விதி முறையின் படியே அள்ள வேண்டும் என பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் மற்றும் களிமண் விவசாய பயன்பாட்டிற்கு அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதியின் கீழ் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாய தேவைக்கு மட்டுமே மண் கொண்டு செல்ல வேண்டும். மேலும் குறியீடு செய்யப்பட்ட இடத்தில் மண் எடுப்பதுடன், வனத்துறையினரால் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் கருவேல மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. கண்மாய்களிலும் வரப்புகளிலும் மண் இருப்பு வைக்க கூடாது. மேலும் அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே மண் எடுத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறி மண் எடுப்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நேர்முக உதவியாளர் ரெங்கராஜன் உடன் இருந்தார்.