உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  புறவழிச்சாலையில் சோலார் விளக்கு

 புறவழிச்சாலையில் சோலார் விளக்கு

முதுகுளத்துாார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புறவழிச்சாலையில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. முதுகுளத்துார் -பரமக்குடி ரோட்டில் இருந்து செல்வநாயகபுரம் விலக்கு ரோடு வரையிலும, முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரை புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மாலை நேரத்தில் இங்கு மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் செல்லும் ரோட்டில் புதிதாக சோலார் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முழுவதுமாக மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி