மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
21-Oct-2024
ராமநாதபுரம்: மழைக்காலம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரம்நகரில் பாதாள சாக்கடைபிரச்னைக்கு தீர்வு காணுங்கள். பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் அலுவலககூட்ட அரங்கத்தில் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்:குமார், பா.ஜ.,: எனது வார்டுக்கு உட்பட பல இடங்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. சரிவர பராமரிக்கவில்லை என்றார்.தொடர்ந்து அ.தி.மு.க.,இந்திராமேரி, தி.மு.க., ராமநாதன், காளிதாஸ் பாதாள சாக்கடை பிரச்னையால் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. மக்களுக்கு நோய்த் தொற்று பரவி விடும். தற்போதுள்ள ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும். நிரந்த தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.தலைவர்: புதிதாக மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கும் இடங்களில் குழாய் மாற்றப்படுகிறது. மழை பெய்வதால் நிறைய தண்ணீர் ஓடுகிறது. விரைவில் சரியாகிவிடும். இதே போல குப்பை அகற்ற ஆள் பற்றாக்குறை உள்ளது. குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும். புகார் தெரிவித்தால் அலுவலர்கள் அலட்சியமாக உள்ளனர் என கவுன்சிலர்கள் பேசினர். தலைவர்: கவுன்சிலர்களுக்கு அலுவலர்கள் உரிய மரியாதை தர வேண்டும். அவர்கள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வார்டுகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
21-Oct-2024