சோனியா பிறந்த நாள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில் சோனியா 79வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நடந்த விழாவில் கேக் வெட்டி, 79 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக திருவாடானை எம்.எல்.ஏ., கரு மாணிக்கம் கலந்து கொண்டார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், அனந்தகுமார், வட்டாரத் தலைவர் சேது பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அரண்மனை, கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.