உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

 சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில், சுத்தியலால் தாக்கியதில் இலங்கை அகதி இறந்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் இரவு, 10:00 மணிக்கு அப்பகுதியில் மது அருந்தினர். அப்போது, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். மண்டபம் போலீசார் மணிகண்டனை கைது செய்து, மலைச்செல்வத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !