உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாயில் மூழ்கி மாணவி பலி இரண்டு பேர் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவி பலி இரண்டு பேர் மீட்பு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கண்மாயில் குளித்த போது மாணவி மூழ்கி பலியானார். மேலும் இரு மாணவியரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.பரமக்குடி அருகே மாங்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகள் யாழினி 12. இவர் புதுக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி ஆண்டு விழா நடந்த நிலையில் சக மாணவிகளுடன் வீட்டிலிருந்து சென்றார். மதியம் 2:45 மணிக்கு மாங்குடி கண்மாயில் யாழினி, சக மாணவியர் பானு, சுகன்யா ஸ்ரீ ஆகியோர் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் மூவரும் அலறியுள்ளனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பானு, சுகன்யா ஸ்ரீயை கரைக்கு இழுத்து வந்தனர். மயக்கம் தெளிந்த இருவரும் யாழினி குளிக்க வந்ததை தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் கண்மாயில் தேடிய போது யாழினி உடல் கண்மாய் நீரில் மூழ்கியிருந்தது தெரிந்தது. அவரை மீட்டு பார்த்திபனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை