மேலும் செய்திகள்
நிழற்குடை இல்லை பயணிகள் கவலை
24-Oct-2025
திருவாடானை: திருவாடானை பாரதிநகரில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மாணவிகள் மழையில் நனைகின்றனர். திருவாடானை அருகே பாரதிநகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி அருகே இருந்த நிழற்குடை சேதமடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.30 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சில நாட்களுக்கு முன்பு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தலைமையில் நடந்தது. கடந்த சில நாட்களாக திருவாடானை பகுதியில் மழை பெய்து வருகிறது. அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பஸ்சில் செல்வதற்காக பாரதிநகர் பஸ்ஸ்டாப்பில் மழையில் நனைந்தபடி நின்றனர். நிழற்குடை இல்லாமல் மாணவிகள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
24-Oct-2025