உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நுாலகங்களை பயன்படுத்த வேண்டும் எஸ்.பி., அறிவுறுத்தல்

 போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நுாலகங்களை பயன்படுத்த வேண்டும் எஸ்.பி., அறிவுறுத்தல்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் அலுவலகத்தை எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார்.அப்போது போலீஸ் நிலையத்தின் செயல்பாடு, பதிவேடுகள்,வழக்கு விபரங்கள், நிலுவை வழக்குகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்பு முதுகுளத்துார் பேரூராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து சட்ட ஒழுங்கு பாதுகாப்பு மேம்பாட்டிற்காக பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். அதன் பின் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள கிளை நுாலகத்திற்கு சென்று புத்தகங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அவசியம் நுாலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே நுாலகத்திற்கு சென்று வாசிப்பு பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பை தாண்டி பொது அறிவையும், சமூக அக்கறையையும் வளர்க்க அது உதவும். சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத்து புத்தகம் வாசிப்பில் ஈடுபட வேண்டும்.இளைஞர்கள் தீய பழக்கங்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்தி தங்களது இலக்குகளை அடைய வேண்டும் என்றார். உடன் டி.எஸ்.பி., சண்முகம், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உட்பட போலீசார் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை