ராமநாதபுரம்: புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும், வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நல்ல வித்தியாசமும் இல்லை என்றார் மார்க் ட்வைன். அறியாமையுடன் ஒருவன் நுாறு ஆண்டு வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது என்றார் புத்தார். இந்த பொன்மொழிகளை அறிந்து தான் அரசு மாவட்டங்களில் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகிறது. ராமநாதபுரத்தில் பிப். 2 முதல் 12 வரை ராஜா பள்ளி மைதானத்தில் காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை புத்தகத்திருவிழா நடக்கிறது.என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம்*சாண்டில்யன் ரசிகை:மா.வளர்மதி, ஆசிரியை, கிளியூர் அரசுப்பள்ளி: குழந்தைகள், பெண்கள், மருத்துவம், வரலாறு என அனைத்து தரப்பு புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. நான் சாண்டில்யன் ரசிகை. ராஜமுத்திரை, நலம் தரும் நாட்டு மருத்துவம், சைவ, அசைவ சமையல், பகவத்கீதை, ரமணிசந்திரனின் வலை ஓசை, உபபாண்டம் போன்ற புத்தகங்களை வாங்கியுள்ளேன்.*ரூ.4 லட்சம் புத்தகங்கள் உள்ளன-----மா.பழனிசாமி, பொறியியல் பட்டதாரி, மோசுகுடி, பார்த்திபனுார்: புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது. இன்று நீர் வழிப்படுஉம். நா.முத்துக்குமார் கவிதைகள் ஆகிய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். எனது வீட்டில் 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் புத்தகங்களை வாங்கி குவித்துள்ளேன். புத்தக கண்காட்சி நடக்கும் சென்னை, கோவை, திருப்பூர் சென்றுள்ளேன்.*புத்தகங்கள் விலை அதிகம்க.யாழினி, கல்லுாரி மாணவி, ராமநாதபுரம்: கடந்த ஆண்டு குறைந்த விலையில் புத்தகங்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இந்தாண்டு விலை அதிகமாக உள்ளது. அறிவு வளர்க்கும் புத்தகங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் அல்பபெட், இமேஜிங் போன்ற புத்தகங்கள் அதிகளவில் உள்ளன. 'தி புக் ஆப் மேன்' என்ற ஓசோ எழுதிய புத்தகம் வாங்கியுள்ளேன்.பாக்ஸ் மேட்டர் *ரூ.1000 புத்தகங்கள் இலவசம்புத்தகத்திருவிழா அரங்கு 32ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு தினமலர் நாளிதழ் ஆண்டு சந்தா தொகை 1999 அல்லது ஆன்-லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை தேர்வு செய்து இலவசமாக பெறலாம். இங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. வாசகர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்கள் ...-------*பெண்ணே பேராற்றல் பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி, பெண் விடுதலை எனப் பேசிய நிலையை கடந்து சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு பெண்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் ஆரோக்கியமான நிலையை இன்று காண்கிறோம். அவ்வையார் பேசிய அரசியலும் இலக்கியமும் ஏனோ நம் நினைவுக்கு வரத் தாமதமாகிறது. அதன் பின்னரும் நிறைய பெண்கள் பேசினார்கள், எழுதினார்கள் . நாம் தான் அதனை மறந்து போனோம். அதனை இந்த நுால் நினைவூட்டுகிறது. ஆசிரியர்: ப.திருமலை. பதிப்பகம்: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை: 280.*ஈழத்தில் தமிழ் இலக்கியம் மரபார்ந்த இலக்கிய படைப்புகள், ஈழத்து கவிதைப்போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப்பாங்குகளையும் இந்நுால் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. ஈழத்து தமிழ் இலக்கியத்தை முழுவதுமாக உணர்ந்தறிந்து கொள்ள இந் நுால் பெருந்துணையாய் அமையும் . ஆசிரியர்: கார்த்திகேசு சிவத்தம்பி. பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். விலை: ரூ.230. *வானம் வசப்படும்ஜாதி, மதம், இனப்புகழ் பரப்பும் பரப்பு செயலுாக்கியல்ல வரலாறு. ஆள்வோர், ஸ்தாபனங்கள் விரும்புபவைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படுபவையும் அல்ல வரலாறு. காலம் காலமாக வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து நடக்கும் விடுதலை போராட்ட உணர்வுகளை மேல் எடுத்துச்சொல்வதே வரலாறு. ஆசிரியர்: பிரபஞ்சன். பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன். விலை : ரூ.560.