உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து குளிர்பான பாட்டில்கள் சிதறியது

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து குளிர்பான பாட்டில்கள் சிதறியது

தொண்டி : தொண்டி அருகே குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ரோட்டில் கவிழ்ந்ததில் குளிர்பான பாட்டில்கள் ரோட்டில் சிதறிக்கிடந்தன.தேவகோட்டையில் இருந்து தொண்டி நோக்கி மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சென்றது. தொண்டி பெருமானேந்தல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் குளிர்பானம், தண்ணீர் பாட்டிகள் சிதறி சேதமடைந்தது. தேவகோட்டையை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் அந்தோணி ஆரோக்கியசாமி 45, இவருக்கு துணையாக சென்ற முகமதுமுத்திப் 27, ஆகியோர் லேசான காயமடைந்தனர். வாகனம் மீட்கப்பட்டு, மீதமிருந்த குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மற்றொரு சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ