உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினமும் வடை கேட்டு சாப்பிடுகிறது காகம்

தினமும் வடை கேட்டு சாப்பிடுகிறது காகம்

திருவாடானை: திருவாடானை அருகே ஒரு காகம் டீக்கடைக்கு சென்று வடை கேட்டு சாப்பிடுவது வியப்பாக உள்ளது.திருவாடானை அருகே திருவெற்றியூரில் டீக்கடை வைத்திருப்பவர் முத்துலட்சுமி. இவரது டீக்கடைக்கு தினமும் காலையில் ஒரு காகம் வருகிறது. காகத்தை பார்த்தவுடன் முத்துலட்சுமி ஒரு வடையை எடுத்து வாயில் வைக்கிறார். வடையை வாயில் கவ்விக் கொண்டு செல்கிறது. முத்துலட்சுமி வடை கொடுக்க தாமதம் ஏற்பட்டால் கடைக்கு முன்பு அடுக்கி வைக்கப்பட்ட வடையை எடுத்துச் சென்று விடுகிறது.அந்த டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காக்கையின் இந்த செயலை வியப்பாக பார்க்கின்றனர். இது குறித்து முத்துலட்சுமி கூறுகையில், அந்த காகம் வரும் போது இறந்து போன எங்களின் உறவினர் வருவது போல் தெரிகிறது. ஆகவே அந்த காக்கைக்கு தினமும் உணவு அளிக்கிறோம். சிறிதும் பயமில்லாமல் சாப்பிடுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை