உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் குப்பை சேமிக்கும் இடமானது

பரமக்குடியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் குப்பை சேமிக்கும் இடமானது

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில்கட்டப்பட்ட மீன் மார்க்கெட் செயல்படாமல் குப்பை சேகரிக்கும் இடமாக மாறி உள்ளது.பரமக்குடி நகராட்சியில்கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தை இடித்து புதிதாக அமைக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு பரமக்குடி நகர் பகுதியில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டுகளும் இயங்கும் வகையில் கூறப்பட்டது.இதனால் ஒவ்வொரு தெருவிலும் மீன் வியாபாரம் செய்யும் நிலை மாறும் என்பதால் சுகாதாரம் காக்கப்படும் என மக்கள் நினைத்தனர். தொடர்ந்து மீன் மார்க்கெட் டெண்டர் விடப்பட்டும் இன்று வரை செயல்படாமல் உள்ளது.வியாபாரிகள் கடைகளை ஒரே இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் பல ஆண்டுகளாக செயல்பட்டு முடங்கிய மீன் சந்தை மீண்டும் இயங்கும்.ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் மீன் வியாபாரம் தொடர்ந்து நடப்பதால் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட வளாகம் வீணாகி வருகிறது. இங்கு தற்போது நகராட்சி குப்பை சேகரித்து வைக்கும் இடமாக மாறி உள்ளது.ஆகவே சுகாதாரம் கருதி மீன் மார்க்கெட்டை ஒரே இடத்தில் அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை