உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்

காந்தி சிலைக்கு மரியாதை மறந்த நகராட்சி நிர்வாகம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு அவரது நினைவு நாளில் கூட மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவில்லை.நேற்று (ஜன., 30) மகாத்மாகாந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதே நேரம் தி.மு.க., நகர செயலாளர் கார்மேகம் தலைவராக உள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலையை யாரும் கண்டு கொள்ளவில்லை. காய்ந்த மாலைகளுடன் காந்தி சிலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பரிதாபமாக காணப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளும் சிலைக்கு மரியாதை செய்ய மறந்தனர்.நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில்,''காந்தி சிலைக்கு அவரது பிறந்த நாள், சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம். அவரது நினைவு நாளில் அவ்வாறு செய்வது வழக்கமில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை