மேலும் செய்திகள்
காரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
28-Oct-2024
ராமநாதபுரம் : டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் தவறி விழுந்த போது அவர் மீது அரசு பஸ் டயர் ஏறியதில் பலியானார். ராமநாதபுரம் அருகே மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் திராவிடச் செல்வம் 45. நேற்று முன்தினம் இவர் அடையாளம் தெரியாத நபரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்தார். தேவிபட்டினம் -பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்த அரசு பஸ்சின் குறுக்கே வந்த போது பின்னால் அமர்ந்திருந்த திராவிட செல்வம் தவறி விழுந்தார்.அவர் மீது பஸ்சின் பின் பக்க சக்கரம் ஏறியதில் தலையில் காயமடைந்தவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவர் இறந்தது தெரியவந்தது. அரசு பஸ் டிரைவர் காரைக்குடி முத்து தெருவை சேர்ந்த கணேசன் 59, புகாரில் கேணிக்கரை போலீசார் டூவீலரை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர்.
28-Oct-2024