உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலி

கடலாடியில் வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலி

கடலாடி: கடலாடி வேளாண் துறை உதவி இயக்குனர் பணியிடம் ஓராண்டிற்கும் மேலாக காலியாக உள்ளதால் விவசாயிகள் அவதி அடைகின்றனர்.கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளும், 42 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கியதாக உள்ளது. நெல், பருத்தி, உளுந்து, சிறு, குறு தானியங்கள் கடலாடி வட்டாரத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலோசனைகளை வழங்கவும், அரசு சார்பில் வழங்கப்படும் மானிய விவரங்கள, அத்தியாவசிய வேளாண்மை குறித்த செய்திகள் பெறவும் கடலாடியில் உள்ள வேளாண் துறை அலுவலகம் பயன்படுகிறது.இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளதால் முதுகுளத்துார் உதவி இயக்குனர் கூடுதல் பொறுப்பாக பணியாற்றுகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கமுதி வேளாண் உதவி இயக்குனர் கூடுதல் பொறுப்பாக இருக்கிறார்.கடலாடி விவசாயிகள் கூறுகையில், கடலாடி சுற்றுவட்டார கிராமங்களில் வேளாண் துறையின் பங்களிப்பு தேவையாக உள்ளது. எனவே ஓராண்டிற்கும் மேலாக சம்பந்தப்பட்ட அலுவலர் நியமிக்கப்படாததால் உரிய தகவல்களை பெற முடியாமல் தவிக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ