உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கம்பம் சாய்ந்தது

மின் கம்பம் சாய்ந்தது

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரோட்டோரங்களில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைகின்றன. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வளமானுார் விலக்கில் இருந்து சோழந்துார் செல்லும் ரோட்டோரத்தில் நேற்று மாலை மின்கம்பம் சாய்ந்தது. ரோட்டின் குறுக்கே மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பம் சாய்ந்த நேரத்தில் ரோட்டில் வாகன போக்குவரத்து இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ