உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நகராட்சியில் உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்

 நகராட்சியில் உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்

பரமக்குடி வியாபாரிகள் கோரிக்கைபரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்து பழைய வரியை அமல்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி தலைவர் சேது கருணாநிதி மற்றும் கமிஷனர் தாமரை ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதன்படி பரமக்குடி பகுதியில் சுற்றித் திரியும் நாய், மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து போஸ்ட் ஆபீஸ் ரோடு போலீஸ் ஸ்டேஷன் வரை சீரமைக்க வேண்டும். பரமக்குடி நகராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவுக்கு மாறாக, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு பழைய வரியை விட பல மடங்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வைகை ஆற்றில் உள்ள நாணல் கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாத்து குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர். தலைவர் போஸ், பொதுச்செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், சுப்பையா, இணைச்செயலாளர் மணவாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தலைவர் மற்றும் கமிஷனர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ