| ADDED : ஜூன் 11, 2024 10:47 PM
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02, 681 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 3,57,306 அரிசி கார்டுகள், 1247 போலீஸ் கார்டுகள், பொருள்வேண்டாம் என 264 கார்டுகள், முதியோர் உதவிதொகை பெறுபவர் 1446 கார்டுகள் உள்ளன.ரேஷனில் அரிசி, து.பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்கள் ஒவ்வவொரு மாதமும் இறுதிவரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே, நடப்பு ஜூன் மாதத்திற்குரிய பாமாயில், துவரம் பருப்பு சில கடைகளுக்கு மட்டும் பெயரளவில் வினியோகம் செய்கின்றனர்.மேலும் கடந்த மாதம் விடுப்பட்ட கார்டுதாரர்களுக்கு இந்த மாதம் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகம் செய்யவில்லை. அரிசி, சர்க்கரை வாங்கிய கார்டுதாரர்கள் ஒருமுறைக்கு பலமுறை கடைக்கு அலைந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்விகேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினர்.இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி கூறுகையில் பாமாயில், பருப்பு டெண்டர் பிரச்னையால் கடந்த மாதம் தாமதம் ஏற்பட்டது. மே மாதம் பாமாயில் 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் அனைத்து கார்டுதார்களுக்கு பாமாயில், பருப்பு விரைவில் வழங்கப்படும் என்றார்.-