மேலும் செய்திகள்
பயணிகளின் வாகனங்களால் தனுஷ்கோடியில் நெரிசல்
23-Sep-2024
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் மணலில் புதைந்த ரோட்டோர தடுப்பு கற்கள் 60 ஆண்டுகளுக்கு பின் கடல் அலை மண் அரிப்பால் வெளியில் தெரிந்தது.தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் கப்பல் போக்குவரத்து துவங்கியதும் இப்பகுதி வணிக நகரமாக விளங்கியது. இங்கு ரயில், சாலை போக்குவரத்து வசதிகள் இருந்ததால் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். 1964ல் வீசிய புயலில் தனுஷ்கோடியில் சர்ச், கோயில், ரயில்வே ஸ்டேஷன் இடிந்து சின்னாபின்னமாகியது.ரயில் தண்டவாளம், ரோடுகள் முற்றிலும் கடலுக்குள் மூழ்கியும், மணலில் புதைந்தும் போனது. அன்று முதல் தனுஷ்கோடிக்கு ரோடு, ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில் 2017ல் பிரதமர் மோடி உத்தரவுபடி தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்தனர்.இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக கடலோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 1964 புயலுக்கு முன் அமைத்த ரோட்டோர தடுப்பு கற்கள் 60 ஆண்டுகளுக்கு பின் வெளியில் தெரிந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
23-Sep-2024