உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதி பணிகளுடன் கிடப்பில் வாறுகால் அமைக்கும் திட்டம் அரசு நிதி வீணடிப்பு

பாதி பணிகளுடன் கிடப்பில் வாறுகால் அமைக்கும் திட்டம் அரசு நிதி வீணடிப்பு

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட நாகநாத சமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஊருணியில் மூன்று மாதங்களுக்கு முன்பு வாறுகால்வாய் அமைக்கும் பணி பாதியில் கிடப்பில் போடப்பட்டதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.இங்கு 300 மீ., நீளத்தில் நாகநாத சமுத்திரம் செல்லும் வழியில் இருந்து பெரிய ஊருணிக்கு போகும் வழியில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு வாறுகால் பணி எவ்வித பயன்பாடும் இன்றி முடங்கியுள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:திருப்புல்லாணி ஒன்றியத்தில் பெருவாரியான அரசு திட்டப் பணிகளை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்யாத நிலையே தொடர்கிறது. குறிப்பாக 300 மீ., நீளத்திற்கு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் அமைக்கப்பட்ட வாறுகால் திட்ட பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மீதம் பணிகளை முடிக்க முடியாமல் இரும்பு கம்பிகளுடன் உள்ளது.சமீபத்தில் பெய்த மழையால் அப்பகுதி நிரம்பி நீர் வெளியேறுகிறது. இதனால் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது. எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க திட்டப்பணிகளை முடிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை