உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அய்யனார் கோயில் கோபுர கலசம் திருட்டு

அய்யனார் கோயில் கோபுர கலசம் திருட்டு

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியாகுடி கிராமத்தில் அய்யனார் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. கோயில் கிராமத்தை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ளது. நேற்று மாலை அந்தபக்கமாக சென்ற சிலர் கோபுரத்திலிருந்த கலசம் திருடு போனதை பார்த்தனர். ரூ.25 ஆயிரம் செலவில் கலசம் அமைக்கபட்டது. இரிடியம் திருடும் கும்பல் திருடியிருக்கலாம் என மக்கள் சந்தேகப்படுகின்றனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை