உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

பரமக்குடி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பரமக்குடி செந்தில் ஆண்டவர் கோயிலில் நேற்று முன்தினம் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது, அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் உள்ளிட்ட சிவன் மற்றும் முருகன் கோயில்களிலும் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவாடானை

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை