மேலும் செய்திகள்
புனித பயணத்திற்கு மானியம் பெறலாம்
1 hour(s) ago
அடிக்கல் நாட்டு
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
1 hour(s) ago
தன்னார்வலர் நேர்காணல்
1 hour(s) ago
வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை
1 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக 5 துணைப்பதிவாளர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டு கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் கடன் பெற்று விவசாயிகள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் பலர் பயன்பெறுகின்றனர்.இந்நிலையில் பரமக்குடி, ராமநாதபுரம் சரகத்தில் தலா ஒருவர், பொதுவினியோக திட்டம், இணைப்பதிவாளரின் நேர்முக உதவியாளர், மத்திய கூட்டுறவு வங்கி வருவாய் அலுவலர், ராம்கோ மேலாண் இயக்குனர் என 6 துணைப்பதிவாளர்கள் பணியிடங்கள் உள்ளன.இதில் ஒருவர் (பி.டி.எஸ்.) மட்டுமே பணியில் உள்ளார். மீதியுள்ள 5 துணைப்பதிவாளர்கள் பணியிடம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலியாக உள்ளது. இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களின் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 பேரின் பணியை ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளதால் ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.எனவே காலியாக உள்ள 5 துணைப்பதிவாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கூட்டுறவுதுறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) மனோகரன் கூறுகையில், அலுவலக பணிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். துணைப்பதிவாளர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago