உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் இல்லை; தவித்த வாய்க்கு தண்ணீரின்றி மக்கள் அவதி

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் இல்லை; தவித்த வாய்க்கு தண்ணீரின்றி மக்கள் அவதி

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகங்கள் என பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக வைத்த குடிநீர் தொட்டிகள் பெயரளவில் தான் உள்ளன. குறிப்பாக குறைதீர் கூட்டம் நடைபெறும் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம் அருகேயுள்ள புதுப்பிக்கப்பட்ட தொட்டி குழாயில் குடிநீர் இன்றி வெறும் காற்றுதான் வருகிறது.பூங்கா வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியும் செயல்படவில்லை. இதனால் மதிய உணவு சாப்பிடும் போட்டி தேர்விற்கு தயராகும் மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக வரும் பொது மக்கள் கைகளை கழுவுவதற்கு கூட தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்து.குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று குறைதீர் கூட்டத்திற்கு வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் செல்லும் வழியில் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையத்திலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படவில்லை. ஆகையால் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் தொட்டிகள் செயல்படவும், கூடுதலாக குடிநீர் தொட்டி வைக்கவும் சம்பந்தப்பட்ட பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி