உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவுநீர் வாறுகால்-, சுகாதார வளாக வசதி வேண்டும்; ஜீவா நகர் பெண்கள் கலெக்டரிடம் புகார்

கழிவுநீர் வாறுகால்-, சுகாதார வளாக வசதி வேண்டும்; ஜீவா நகர் பெண்கள் கலெக்டரிடம் புகார்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் கழிவு நீர் வாறுகால் தேவை குறித்தும், பூட்டப்பட்ட சுகாதார வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.பரமக்குடி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் நேற்று ஜீவா நகரில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பார்வையிட்டார். அங்கு நடைமேடை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை முறைப்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து கலெக்டரிடம் வார்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினர். அப்போது ஜீவா நகரில் சில தெருக்களில் வாறுகால் வசதி இல்லாமல் உள்ளது. தற்போது பூங்கா கட்டப்பட்ட சூழலில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வழிந்தோடும் பகுதி தடுக்கப்பட்டுள்ளது.இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளதால் இயற்கை உபாதைகளுக்கு வெளியிடங்களை நாடும் சூழல் இருக்கிறது. ஆகவே இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றனர்.கலெக்டர் நகராட்சி கமிஷனர் முத்துசாமி மற்றும் இன்ஜினியர் செல்வராணி உள்ளிட்டோரிடம் கழிவு நீர் வாய்க்கால் கட்டுவதுடன் சேதமடைந்த சுகாதார வளாகத்தை பொது நிதியில் கீழ் சீரமைக்க அறிவுறுத்தினார். உடன் நகராட்சி உதவி பொறியாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை