உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு

 முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம்: திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது. நேற்று திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தஞ்சி பைனான்ஸ் உரிமையாளர் தஞ்சி சுரேஷ் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதே போல் வடக்கு தெரு பாலசுப்பிரமணியம் சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகே வினைதீர்க்கும் வேலவர், நீச்சல்குளம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி சொற்பொழி, கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் திருவிளக்குகளை ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிப் பட்டனர். *திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ் வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ் வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர், நம்புதாளை பாலமுருகன் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் நேற்று கார்த்திகை தீப வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் பிரகாரங்களில் அகல் விளக்குகள் ஏற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். * ஆர். எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கோயில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் கிராமத்தார்கள் சார்பில் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. இதில் விவசாயிகள் பனை ஓலையால் தாயார் செய்யப்பட்ட நீண்ட சுளுந்தில் தீ மூட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பனை ஓலையால் செய்யப்பட்ட சுளுந்தை வயல் வரப்புகளில் ஊன்றி வழிபாடு செய்தனர். இதன் மூலம் நெல் வயலில் உள்ள பூச்சி இனங்கள் பெரும்பாலும் எரியும் தீயில் விழுந்து இறந்து விடும் என்பதால், பின்வரும் நாட்களில் நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறைந்து விவசாயம் செழிப்படையும் என்பதால், முன்னோர்கள் காலம் தொட்டு கார்த்திகை தீப நாளில் இந்த நடைமுறையை ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருவதாக கிராமத்தார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை