உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திருமங்கையாழ்வார் அவதார தினம்

 திருமங்கையாழ்வார் அவதார தினம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருமங்கையாழ்வார் அவதார தினம் கொண்டாடப்பட்டது. திருமங்கையாழ்வார் வைணவ நெறியை பின்பற்றிய 12 ஆழ்வார்களில் ஒருவர். இவர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார். திருமங்கை நாட்டை ஆண்ட இவர் பிற்காலத்தில் 1253 பாசுரங்களை பாடியுள்ளார். இவரது உற்சவர் திருமேனிக்கு நேற்று எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ