உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நடந்தது. முன்னதாக வள்ளலாருக்கு 18 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நடத்தினர். பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை