மேலும் செய்திகள்
சேதமடைந்த இரும்பு பிளேட் புதுப்பிப்பு
5 minutes ago
இ--சேவை மையத்தில் அங்கன்வாடி
7 minutes ago
நீரில் செத்து மிதக்கும் வவ்வால்கள் பாதுகாக்க வலியுறுத்தல்
10 minutes ago
நாகூர் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா
14 minutes ago
திருவாடானை: அரசு பஸ்களில் கியூ ஆர் கோடு வாயிலாக பஸ்களில் டிக்கெட் வழங்கப்பட்டாலும் அதனை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தாமல் உள்ளதால் சில்லரை பிரச்னை அதிகரித்துள்ளது. தேவகோட்டை அரசு பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படும் மொபசல் மற்றும் டவுன் பஸ்களில் கியூ ஆர் கோடு வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றில் விரைவு பஸ்களும் உள்ளன. தற்போது பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கண்டக்டரிடம் சில்லரை பிரச்னை குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை பயன்படுத்தாமல் உள்ளனர். கண்டக்டர்கள் கூறியதாவது: கியூ ஆர் கோடு வாயிலாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் வசதி, பயணியர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் வெளியூர் செல்லும் பஸ்களில் தொலைதுாரம் பயணிப்போர் மட்டுமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்கின்றனர். பெரும்பாலான பயணிகள் கியூ ஆர் கோர்டு வாயிலாக பணம் செலுத்த முற்படுவதில்லை. கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்து கின்றனர். கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொதுமக்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்தால் கூட இதை பயன்படுத்தி பயணிக்கலாம் என்றனர்.
5 minutes ago
7 minutes ago
10 minutes ago
14 minutes ago