அரசு பஸ் மோதி டைம் கீப்பர் பலி: டிரைவர் சஸ்பெண்ட்
தேவிபட்டினம்; ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில், நின்று கொண்டிருந்த டைம் கீப்பர் ராமு 55, மீது அரசு பஸ் மோதியதில் அவர் பலியனார். இதையடுத்து பஸ் டிரைவர் கந்தசாமி 59, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார் கோட்டையைச் சேர்ந்தவர் ராமு 55. இவர் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் டைம் கீப்பராக பணியில் இருந்தார். நேற்றுமுன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற அரசு பஸ், டைம் கீப்பர் ராமு மீது மோதியதில் பலியானார். எஸ் காவனுாரைச் சேர்ந்த பஸ் டிரைவர் கந்தசாமி 59, திருப்பாலைக்குடி போலீசில் சரணடைந்தார். அவரை தேவிபட்டினம் போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் ரவிக்குமார், பஸ் டிரைவர் கந்தசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.