நாளை நலம் காக்கும் மருத்துவ சேவை முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமக்குடியில் உள்ள சவுராஷ்ட்ரா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (டிச.,24) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற உள்ளது. பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, மகப்பேறுவியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இயன்முறை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை மருத்துவம், இந்திய மருத்துவ முறை சிகிச்சை மருத்துவம், எக்ஸ்-ரே, ஸ்கேன், எக்கோ போன்ற சிறப்பு மருத்துவ சேவைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே சான்றிதழ்கள் வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.