உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள அரண்மனையை சுற்றிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி, பழக்கடைகள் என மெயின் பஜாராக உள்ளது. அரண்மனை ரோட்டில் கோட்டைவாசல் விநாயகர் கோயில் அருகே ரோட்டை ஆக்கிரமித்து கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வந்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே அரண்மனை ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை