| ADDED : ஜன 18, 2024 05:51 AM
கமுதி: -கமுதியில் பஜார் உட்பட முக்கிய சாலைகளில் டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி பஸ் ஸ்டாண்ட், பஜார், சந்தை கடை உட்பட 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. சாலையோரத்தில் உள்ள கடைகளுக்கு சரக்கு இறக்க லாரி,வேன் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டூவீலரில் வரும் பொதுமக்கள் சாலையோரங்களில் கண்டபடி நிறுத்துவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பஸ்கள் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. காலை நேரத்தில் பணியாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். கமுதி- - சாயல்குடி சாலை பஜாரின் சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சாலையில் டூவீலர்களை நிறுத்துவதை தடுக்கவும், சரக்குவாகனங்களை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.