உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண் துறை சார்பில் தொழில் நுட்ப மேலாண்மை முகமை - விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில்மாடக்கொட்டானில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குநர் அம்பேத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவு உதவி இயக்குநர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விபரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் விபரங்கள் விளக்கப்பட்டது. மேலும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் மானிய விபரங்கள், மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் அலுவலர் ரவிசந்திரன், உதவி அலுவலர் சித்திரைச்செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார், தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி, விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ