உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்வளத் துறை முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

மீன்வளத் துறை முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

தேவிபட்டினம்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சமூக அடிப்படையிலான அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி திட்டம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அவசர கால பயிற்சிகள் தேவிபட்டினத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் அப்தாஹிர் தலைமை வகித்தார். கடற்கரை காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, போலீசார் சதாம் உசேன், தங்க முருகன் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் மழை, புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது மீனவர்களும், மீட்பு படையினரும் மேற்கொள்ள வேண்டிய அவசர கால பொறுப்புகள் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்கள் அவசரகால மீட்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !