உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி

அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே புத்தேந்தலில் அங்ககப் (இயற்கை) பண்ணையம் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.புத்தேந்தல் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை -விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் அங்ககப் பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அங்ககப் பண்ணையம் செய்யும் முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்துரைத்து ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துதல் கூடாது என்றார்.புத்தேந்தல் ஊராட்சித் தலைவர் கோபிநாத், ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி, வேளாண் அலுவலர் தமிழ், உதவி அலுவலர் முத்துதுக்குமார், ராமநாதபுரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ