உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கீழக்கரையில் தெரு நாய்களை கையாள்வதற்கான பயிற்சி

 கீழக்கரையில் தெரு நாய்களை கையாள்வதற்கான பயிற்சி

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை மருத்துவ துறை இணைந்து நகராட்சி பணியாளர்களுக்கு எவ்வாறு வெறி நாய்களை பிடிப்பது, அவற்றை பாதுகாப்பாக கையாள்வது பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அலுவலர் சென்னை ஜெயகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் ராஜா, கால்நடை இயக்குனர் தெரசா மேரி, உத்தரகோசமங்கை கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ