பரமக்குடியில் ஆடி காற்றில் முறியும் மரங்கள்
பரமக்குடி; பரமக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வரும் சூழலில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். இதன்படி கடந்த சில நாட்களாக பரமக்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வளர்ந்துள்ள மரங்கள் ஆங்காங்கே முறிந்துள்ளன. மேலும் வீசி வரும் காற்றில் சில பகுதிகள் துாசி மண்டலமாக மாறுகிறது. இதேபோல் பரமக்குடியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் காற்றில் சாயும் படி உள்ளது. ஆகவே விபத்துக்கள் ஏற்படும் முன் பேனர்களை முறைப்படுத்த நகராட்சி, போலீசார் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.